** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 30 November 2015

30/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. டிசம்பர் மாதத்திற்கான டிரவேட்டிஸ் துவங்கி இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 7942 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7952 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7930,7900,7850
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 77975,8000,8080
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.76 ரூபாயில் வர்த்தகத்தை முடித்திருந்தாலும், வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 66.89 ரூபாய் அளவுக்கு சரிந்தது. அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் உள்ள முதலீடுகள் தொடர்ந்து வெளியே எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013 செப்டம்பரில் இருந்த நிலைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் அந்நிய முதலீடு உயர்ந்திருந்தாலும், நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் 5,252 கோடி ரூபாயும், கடன் சந்தையில் 2,924 கோடி ரூபாயும் வெளியேறி உள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 66.80க்கு கீழே செல்லும் போது மேலும் ஒரு ரூபாய் வரை சரியலாம் என்று தொழில்நுட்ப நிதி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் மட்டுமே ரூபாய் மதிப்பு 2 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு ஆண்டில் 5.5 சதவீதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. அதேபோல டாலர் குறியீட்டு கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு 100க்கும் மேலே சென்றிருக்கிறது.
டிசம்பர் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக்கொள்கையை அறிவிக்க இருக்கிறது. அதேபோல டிசம்பர் 3-ம் தேதி ஐரோப்பிய மத்திய வங்கியும் தன்னுடைய நிதிக்கொள்கையை அறிவிக்க இருக்கிறது. டிசம்பர் 16-ம் தேதி அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவெடுக்கும் பட்சத்தில் ரூபாயில் ஏற்ற, இறக்க நிலையில் தெளிவான சூழல் உருவாகும் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.